இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஆட்டங்கள் கொண்ட T20 தொடரில் விளையாடியது.
இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளின் முடிவிலேயே நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி விட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3ஆவது மற்றும் கடைசி T20 போட்டி நேற்று நடைபெற்றது.
அதில் இலங்கை அணி வெற்றி பெற்றது. எனினும், இலங்கை அது அணிக்கு ஆறுதல் வெற்றியாகவே அமைந்தது. ஏனெனில் முதல் இரு ஆட்டங்களில் வென்று இருந்த நியூசிலாந்து அணி தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
குசல் பெரேரா ஆட்ட நாயகனாகவும்இ நியூசிலாந்து வீரர் ஜேக்கப் டபி தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
முன்னதாக குசல் பெரேரா இந்த ஆட்டத்தில் 44 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் சர்வதேச T20 கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த இலங்கை வீரர் என்ற மாபெரும் வரலாற்று சாதனையை அவர் படைத்துள்ளார்.
இதற்கு முன்னர் தில்ஷன் 55 பந்துகளில் சதமடித்ததே சாதனையாக இருந்தது. தற்போது அதனை முறியடித்துள்ள குசல் பெரேரா புதிய சாதனை படைத்ததிருந்தமை குறிப்பிடத்தக்கது.