தற்போது பருவநிலை மாற்றம் காரணமாக சவுதி அரேபியாவில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது.
கடந்த வருடம் ஏப்ரல் மாதம் பெய்த கனமழையால் குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் புகுந்து மக்கள் பெரும் அவதிக்கு ஆளாயினர். வெள்ளப்பெருக்கு காரணமாக ஓமனில் 21 பேரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் 4 பேரும் உயிரிழந்தனர்.
இந்நிலையில் தற்போது சவுதி அரேபியாவில் மீண்டும் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் சவுதி அரேபியாவில் பொது இடங்களுக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.