NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சாதனை படைத்த உலகக் கோப்பை தொடர்!

இந்தியாவில் சமீபத்தில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை வீழ்த்தி அவுஸ்திரேலியா அணி 6ஆவது முறையாக சம்பியன் பட்டம் வென்றது.

கடந்த ஒக்டோபர் 5ஆம் திகதி தொடங்கி 7 வார காலமாக நடந்த இந்த கிரிக்கெட் திருவிழா கடந்த 19ஆம் திகதியுடன் நிறைவு பெற்றது. இதில் அவுஸ்திரேலிய அணி உலகக் கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

இந்நிலையில், இந்த உலகக் கோப்பை தொடர் முழுவதையும் 1.25 மில்லியன் இரசிகர்கள் நேரில் கண்டுகளித்துள்ளனர் என ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.

45 நாட்கள் நடந்த இந்த தொடரை சுமார் 12,50,307 இரசிகர்கள் மைதானத்துக்கு வந்து நேரில் கண்டுகளித்துள்ளனர். இது உலக சாதனையாக மாறியுள்ளது.

கடந்த 2015இல் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடந்த உலகக் கோப்பை தொடரை 1.016 மில்லியன் இரசிகர்கள் நேரில் பார்த்ததே சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles