NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சாதனை படைத்த முல்லைத்தீவு பெண்ணுக்கு பாராட்டு விழா!



பிலிப்பைன்ஸில் தங்கம் வென்ற முள்ளியவளையைச் சேர்ந்த 72 வயதுடைய அகிலத்திருநாயகிக்கு முல்லைத்தீவு மாவட்டச் செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.


பிலிப்பைன்ஸில் இடம்பெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் முல்லைத்தீவு – முள்ளியவளையைச் சேர்ந்த 72 வயதுடைய அகிலத்திருநாயகி  1500 மீற்றர் ஓட்டப்போட்டி மற்றும், 5000 மீற்றர் விரைவு நடைப்போட்டி ஆகியவற்றில் 2 தங்கப் பதக்கங்களையும் 800 மீற்றர் ஓட்டபோட்டி ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்தமையை பாராட்டி இந்த கௌரவிக்கும் நிகழ்வு நேற்று முல்லைத்தீவில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் அகிலத்திருநாயகியின் சாதனைகள் தொடர்பாக வாழ்த்துரைகள் இடம் பெற்றதுடன் நினைவுச் சின்னம் மற்றும் பணமுடிப்பு வழங்கியும் பொன்னாடை மாலை அணிவித்தும் அகிலத்திருநாயகி கௌரவிக்கப்பட்டார்.

Share:

Related Articles