(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
சாதாரணத் தரப் பரீட்சைக்குத் தோற்றிய விண்ணப்பதாரர்களுக்கு அழகியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய பாடங்கள் தொடர்பான நடைமுறைப் பரீட்சைகள் இம்மாதம் 27ஆம் திகதி தொடக்கம் ஜூலை 31ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, உள்ளுர் நடனம், பரதநாட்டியம் மற்றும் சங்கீத நடைமுறை பரீட்சைகள் ஜூன் 27 முதல் ஜூலை 6 வரையிலும், பொறியியல் தொழில்நுட்ப நடைமுறைத் பரீட்சைகள் ஜூலை 12 முதல் ஜூலை 21 வரையிலும், உயிரியல் தொழில்நுட்பத்திற்கான நடைமுறைத் தேர்வுகள் ஜூலை 29 முதல் ஜூலை 31 வரை நடைபெறும் என்றும் பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.