யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமும் கடை அடைப்பு நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த போராட்டமானது இன்று (08.07.2024) அந்தப் பகுதி சாவகச்சேரி பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையை தீர்த்து வைத்தியசாலையின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க வேண்டும் என கோரியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அப்பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளதுடன் மக்கள் அணிதிரண்டு அமைதியான வழியில் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்பகுதியில் காவல்துறை அதிகாரிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரான அர்ச்சுனாவை இரவோடு இரவாக கைது செய்ய வந்த பொலிஸார் மக்களின் பாரிய எதிர்ப்பை அடுத்து அவரை கைது செய்ய முடியால் போனது குறிப்பிடத்தக்கது.