NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சிரியாவில் ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தலைவர் பலி !

சிரியாவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் படை மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.

இவர்களை அழிக்க சிரியாவுடன் இணைந்து அமெரிக்க படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதையடுத்து சிரியாவில் உள்ள தீவிரவாத முகாம்களை குறி வைத்து அமெரிக்க படையினர் வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் நடத்திய தாக்குதலில் ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தலைவர் உசாமா அல்-முல்காஜிர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இவரை கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கா தேடி வந்தநிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அல்-முல்காஜிரை தேடி அமெரிக்காவின் 3 எம்.கியூ.-9 ஆளில்லா விமானம் சிரியா வானில் வட்டமிட்டுள்ளது.

இதன்போது அவர் மீது ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்ததாக அமெரிக்கா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Share:

Related Articles