அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள விமான நிலையத்தின் கிழக்கு முனையில் சிறிய ரக விமானம் ஒன்றுடன் தரையிறங்க வந்த மற்றொரு விமானம் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தை தொடர்ந்து மீட்பு குழுவினர் உடனடியாக விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
எனினும் இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு மேலும் 2 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்ததாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.