NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சிறுமியின் காதில் அறைந்து கொடூரமாக தாக்கிய ஆசிரியர் கைது!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

அம்பாறையில் உள்ள பாடசாலை ஒன்றில் ஐந்து வயது சிறுமியின் காதில் அறைந்து கொடூரமாக தாக்கியதாக கூறப்படும் ஆசிரியர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பானம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 54 வயதுடைய ஆசிரியர் தாக்குதலுக்கு உள்ளான சிறுமியின் வகுப்பு ஆசிரியர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தாக்குதலுக்கு உள்ளானதாகக் கூறப்படும் சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Share:

Related Articles