NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சிறுமி கடத்தல் – தகவல் தெரிந்தவர்கள் தொடர்புகொள்ளுமாறு வேண்டுகோள்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

மினுவாங்கொடை, ஓபாத பிரதேசத்தில் 15 வயது சிறுமி கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனது மகளுடன் காதல் உறவில் ஈடுபட்ட நபரே இந்த கடத்தலை மேற்கொண்டிருக்கலாம் என சிறுமியின் தாய் குற்றம் சுமத்தியுள்ளார்.

15 வயதுடைய சிறுமி தனது பெற்றோருடன் மினுவாங்கொட ஒபாத பிரதேசத்தில் வசித்து வந்ததாகவும், உறவு முறிந்ததால் கோபமடைந்த காதலன் தனது அத்தை மற்றும் மேலும் இருவருடன் அவரது வீட்டிற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாட்டில் இருக்கும் சிறுமியின் தாயாருக்கு இந்த காதல் விவகாரம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், வெல்லவாய பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சிறுமியை அனுப்பி வைத்துள்ளார்.

இருப்பினும், ஏப்ரல் 12ஆம் திகதியன்று, சிறுமியை அவரது உறவினர் வீட்டிற்கு வந்த மூன்று பேர் கடத்திச் சென்றதாக சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார். தனது மகளைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் 076 883 6225 என்ற எண்ணுக்குத் தெரிவிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Share:

Related Articles