NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சிறுவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட கத்திக்குத்து.

பிரித்தானியா நோர்த் – வெஸ்ட் இங்க்லண்ட் மாகாணம், சௌத்போர்ட் நகரில் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் 3 சிறுமிகள் உயிரிழந்துள்ளனர்.

சிறுவர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட கத்திக் குத்து தாக்குதலில் 11 சிறுவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 5 பேரின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது.

குறித்த சம்பவத்தில் பாதிப்புற்ற சிறுவர்கள் அனைவரும் கோடைகால விடுமுறை முகாமில் கலந்துகொண்ட போதே இத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

சிறுவர்களை காப்பாற்ற முயன்ற இருவர் உயிருக்கு போராடி வருகின்றனர்.இத் தாக்குதலுடன் தொடர்புடையவர் எனக் கருதப்படும் 17 வயதுடைய சிறுவன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஆனால், சிறுவர்கள் மீது நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதலுக்கான நோக்கம் என்ன என்பது குறித்து இதுவரையில் எந்தத் தகவலும் இல்லை.

Share:

Related Articles