NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சிறுவர் இல்லத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 5 சிறுமிகள் மாயம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

மீட்டியாகொட பிரதேசத்தில் சிறுவர் இல்லமொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து சிறுமிகள் தப்பிச் சென்றுள்ளதாக மெட்டியகொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்தக் குழு நேற்று (29) பிற்பகல் சிறுவர் இல்லத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கப்படுகிறது.

தப்பியோடிய 17, 14 மற்றும் 13 வயதுடைய சிறுமிகள் படபொல, கொழும்புகெயர, ஹிக்கடுவ, எல்பிட்டிய மற்றும் நெலுவ பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எனினும் தப்பியோடிய சிறுமிகள் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share:

Related Articles