சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குடும்ப சுகாதாரப் பணியகம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, நாட்டில் பாடசாலை மாணவர்களிடையே சமூக வலைத்தளங்களின் பாவனை அதிகரித்துள்ளதாகவும் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிலையில், சிறுவர்களுக்கு எதிரான கொடுமைகள் மற்றும் தகாதமுறைக்கு உட்படுத்தல் சம்பவங்கள் அதிகரிப்பதற்கு பெற்றோரின் பொறுப்பற்ற நடத்தையும் காரணமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, சமூக வலைத்தளங்களால் தங்களுடைய பிள்ளைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை பெற்றோர்கள் புரிந்துக்கொள்வது மிகவும் அவசியம் என பணியகம் வலியுறுத்தியுள்ளது.
மேலும், குழந்தைகள் தற்செயலாக தவறான மற்றும் வன்முறையான சம்பவங்களுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்பதால் பெற்றோர்கள் அல்லது பெரியவர்கள் இவ்விடயத்தில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் குடும்ப சுகாதாரப் பணியகம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.