NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சிறைச்சாலை தினத்தை முன்னிட்டு கைதிகளுக்கு விசேட சலுகை!

119வது சிறைச்சாலை தினத்தை முன்னிட்டு இன்று (16) சிறைக்கைதிகளை திறந்த வெளியில் பார்வையிடும் விசேட சந்தர்ப்பமொன்றை வழங்குவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைவாக இன்று (16) கைதிகளின் உறவினர்களால் கொண்டுவரப்படும் ஒரு கைதிக்கு போதுமான உணவு மற்றும் சுகாதார பொருட்களை வழங்குவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி.திஸாநாயக்க குறிப்பிட்டார்.

இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை மூளைக் காய்ச்சலால் கைதி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து காலி சிறைச்சாலையின் செயற்பாடுகளை இன்று முதல் ஒரு வாரத்திற்கு மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வைத்தியசாலையின் பணிப்பாளர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles