22 இலட்சம் நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெண் ஒருவர் வெலிகடை சிறைச்சாலையில் இருந்து அவருக்கு எதிரான வழக்கின் சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுத்த சம்பவம் ஒன்று தொடர்பில் பொலிஸார் வௌிப்படுத்தியுள்ளனர்.இது தொடர்பான வழக்கு கெஸ்பேவ நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, பயங்கரவாதத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் இதை நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.இதன்போது, சந்தேக நபரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஆபாச காட்சிகளை இணையத்தில் பதிவேற்றம் செய்த சம்பவத்தில் கைது செய்யப்படுவதை தடுப்பதாக கூறி குற்றம் சாட்டப்பட்ட நபர்களிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் குறித்த பெண் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.இதன்போது 22 இலட்சம் ரூபாயை சந்தேகத்திற்கிடமான பெண் மோசடியான முறையில் பெற்றுக்கொண்டது தெரியவந்துள்ளது.மொரட்டுவ கொரலவெல்ல பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி பிலியந்தலை மடபாத பகுதியில் உள்ள அவரது தற்காலிக வீட்டில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.