NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சிலாபம் பகுதியில் வீடொன்றில் தீ விபத்து – மூவர் உயிரிழப்பு

புத்தளம் – சிலாபம், சிங்கபுர பகுதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தீ விபத்து நேற்று (19) இரவு ஏற்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தீ விபத்தில் தாய், தந்தை மற்றும் அவர்களது குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share:

Related Articles