NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

தென் அமெரிக்க நாடான சிலியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

அந்நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள கோகிம்போவில் இருந்து தென்-தென்மேற்கே 41 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவில் 6.2 புள்ளிகளாக பதிவானது. பயங்கர நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். சேத விவரங்கள் குறித்து உடனடியாக தகவல்கள் வெளியாகவில்லை.

கடந்த 2010ம் ஆண்டு 8.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம், அதைத்தொடர்ந்து உண்டான சுனாமியில் 526 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles