NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு..!

லங்கா சதொச நிறுவனம் சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்குத் தீர்மானித்துள்ளது.

அதன்படி, வெள்ளை சீனி, கீரி சம்பா , உருளைக்கிழங்கு, வெள்ளை கௌப்பி, இந்திய பெரிய வெங்காயம் மற்றும் பாசிப்பயறு ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன

அத்துடன்,ஒரு கிலோ வெள்ளை சீனி 249 ரூபாவாகவும், ஒரு கிலோ கீரி சம்பா அரிசி 248 ரூபாவாகவும், ஒரு கிலோ உருளைக்கிழங்கு (சீனாவிலிருந்து இறக்குமதி ) 230 ரூபாவாகவும், ஒரு கிலோ வெள்ளை கௌப்பி 978 ரூபாவாகவும், ஒரு கிலோ இந்திய பெரிய வெங்காயம் 255 ரூபாவாகவும், ஒரு கிலோ பாசிப்பயறு 935 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த விலை மாற்றங்கள் இன்று (09) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles