NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சிவனொளிபாத மலைக்கு யாத்திரைக்காகச் சென்ற நபர் உயிரிழப்பு!

மொனராகலையில் இருந்து சிவனொளிபாத மலைக்கு வழிபட வந்த 79 வயதுடைய வயோதிப பெண் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.

மொனராகலை பிரதேசத்தை சேர்ந்த யாத்திரிகள் குழுவொன்று நல்லதண்ணி வீதியூடாக சிவனொளிபாத மலை நோக்கி சென்று கொண்டிருந்த போது, அந்த யாத்திரிகர்கள் குழுவை சேர்ந்த குறித்த வயோதிப பெண் திடீரென சுகவீனமடைந்துள்ளார்.

இந்நிலையில், அவரை சிகிச்சைக்காக மஸ்கெலியா பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுத்த நிலையில் அதிகாலை 4 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக மஸ்கெலியா பிராந்திய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Share:

Related Articles