NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சி.ஐ.டியினரைத் தாக்கிய நால்வர் கைது!

ரம்புக்கனை திஸ்மல்பொல பகுதிக்கு சென்ற பொலிஸ் விசேட அதிரடிப்படையின் இரு உத்தியோகத்தர்களை தடிகளால் தாக்கி உத்தியோகத்தர் ஒருவரை கத்தியால் காயப்படுத்திய சந்தேகத்தின் பேரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களும் இரண்டு ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல்காரர் எனப் படையணியினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நால்வரில் ஆசிரியத் தொழிலில் ஈடுபடும் பெண்ணொருவரும் 25 வயதுடைய பல்கலைக்கழக மாணவர் ஒருவரும் உள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காயமடைந்த இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்களும் கேகாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Share:

Related Articles