சீகிரியா குன்றில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக மின்தூக்கியை நிறுவுவது குறித்து அவதானம் செலுத்தப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீகிரியா மற்றும் அதனை சூழவுள்ள சுற்றுலாப் பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பில் அண்மையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது இந்த விடயம் குறித்த கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீகிரியாவிற்கு பிரவேசிக்கு முதியவர்கள், விசேட தேவையுடையவர்கள் மற்றும் நோயுற்றவர்களை இலகுவாக அழைத்துச் செல்வது போன்ற விடயங்களில் கவனம் செலுத்தும் வகையில் இந்த திட்டம் முன்மொழியப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், இந்த கலந்துரையாடலில், பௌர்ணமிக்கு முந்தைய நாள், பௌர்ணமி தினம் மற்றும் அதற்குப் பின்னரான இரண்டு நாட்களிலும் இரவு நேரத்தில் சீகிரியா குன்றை பார்வையிடுவதற்கு அனுமதி வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த முன்மொழிவுகள் குறித்து இறுதி முடிவு எட்டப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.