வரலாற்றுச் சிறப்புமிக்க நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகப் பெருவிழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெறவுள்ளது.
மேற்படி கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தமிழகத்திலிருந்து வந்துள்ள ஆலய கோபுரங்களுக்கான கலசம், அயோத்தி சடாயு நதி தீர்த்தம், நேபாளத்திலிருந்து சீதையம்மனுக்கான சீர்வரிசை பொருட்கள் யாவும் கொழும்பு மயூரபதி ஆலயத்தில் வைத்து காலை 8.30 மணியளவில் விசேட பூஜைகள் நடத்தப்படவுள்ளது.
பின்னர் ஊர்வலமாக டிக்மன் வீதி, காலி வீதி, காலி முகத்திடல், கோட்டை வழியாக கொழும்பு 11 முதலாம் குருக்குத்தெரு சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்திலும் வைத்து. காலை 9.30 மணியளவில் வரவேற்பு மரியாதை பூஜை நடைபெறவுள்ளது.
அதனையடுத்து செட்டியார் வீதி முத்து விநாயகர் ஆலயம், கதிரேசன் ஆலயம் என்பவற்றிலும் பூஜை மரியாதைகளை ஏற்றுக்கொண்டு ஜெம்பட்டா வீதி வழியாக கொட்டாஞ்சேனை சந்தி ஊடாக ஆமர்வீதி நெடுஞ்சாலை வழியே பயணித்து சீதாஎலிய சீதையம்மன் ஆலயத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படவுள்ளது.