கம்பஹா – சீதுவ வெலபட வீதியில் இன்று துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளது.
கார் ஒன்றில் வந்த இனந்தெரியாத நபர்களால் குறித்த துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த மூவரும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மூவரில் 53 வயதுடைய நபர் ஒருவர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு, மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.