NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சீனாவில் பரவி வரும் பல்தரப்பட்ட வைரஸ்கள்!

கொவிட் -19 வைரஸ் பரவலுக்கு பிறகு சுமார் 5 வருடங்களுக்குப் பிறகு, சீனாவில் பல வைரஸ்கள் பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Human metapneumovirus (HMPV) (HMPV) எனப்படும் ஒரு வைரஸ் நிலை பரவலாக இருப்பதாகவும், அவர்களில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களும் இருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்களில் தகவல்கள் வௌியாகியுள்ளன.

மேலும், சீனாவில் இன்ஃபுளுவென்சா (influenza) வைரஸூம் பரவி வருகிறது.

சீனாவில் வைரஸின் தாக்கம் வேகமாகப் பரவி வருவதாகவும், சமூக ஊடகங்கள் மூலம் சீனாவின் தற்போதைய நிலைமை குறித்த யோசனையைப் பெற முடியும் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வைரஸ் பாதிப்பு காரணமாக வைத்தியசாலைகளில் நோயாளிகளால் நிரம்பியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரத்தை கருத்திற்கொண்டு சீனாவில் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும்இ இது தொடர்பில் இதுவரை அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

இந்த வைரஸ் பரவல் நிலை குறித்து சீன அதிகாரிகள் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles