NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் குறித்து அச்சமடைய தேவையில்லை!

இத்தினங்களில் சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ், கடந்த காலங்களில் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்ட வைரஸ் நோய் நிலைமையாகும் என வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த வைரஸ் தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ள தேவையில்லை என வைரஸ் நோய் நிபுணர் வைத்தியர் ஜூட் ஜயமஹ சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே வைரஸ் நோய் நிபுணர் வைத்தியர் ஜூட் ஜயமஹ இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த வைரஸ் நோயின் அறிகுறிகள் தொடர்பிலும் விசேட வைத்திய நிபுணர் விளக்கமளித்தார். 

“பொதுவாக இருமல், சளி, லேசான காய்ச்சல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும், மேலும், நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு நிமோனியாவாக மாறலாம்.

ஆனால் இது மிகவும் அரிதாகவே நிகழ்கிறது மற்றும் அனைவருக்கும் நடக்காது. இதன் உயிரிழப்பிற்கான நிகழ்தகவு மிகவும் குறைவாகும்.  சில நாட்களுக்கு காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்றவற்றுக்குப் பிறகு பெரும்பாலான மக்கள் குணமடைகின்றனர். இதனை பரிசோதிக்க வேண்டிய அவசியமில்லை.” என்றார்.

Share:

Related Articles