NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சீனாவில் பெய்துவரும் பலத்த மழை – மண்சரிவில் சிக்கி 14 பேர் பலி!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஜின்கோஹியில் பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த சில தினங்களாக பெய்துவரும் பலத்த மழை காரணமாக இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டு வரும்நிலையில், பலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டுள்ளதனால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles