NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சீன தயாரிப்பான டிக்டொக் செயலிக்கு நேபாளத்தில் தடை!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

சீனத் தயாரிப்பான டிக் டொக் சமூக ஊடகங்களின் உள்ளடக்கம் சமூக நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிப்பதாகக் கூறி நேபாளம் தடை செய்துள்ளதாக என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டில் அனைத்து சமூக ஊடக நிறுவனங்களும் தொடர்பு அலுவலகங்களை அமைக்க வேண்டும் என்ற புதிய விதியை நேபாளம் அறிமுகப்படுத்திய சில நாட்களுக்குப் பிறகு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சுமார் ஒரு பில்லியன் மாதாந்திர பயனர்களைக் கொண்ட வுமைவுழம, ஆரம்பத்தில் இந்தியா உட்பட பல நாடுகளால் தடைசெய்யப்பட்டது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், மொன்டானா தடைசெய்யப்பட்ட முதல் அமெரிக்க மாநிலமாக ஆனது. மேலும் இங்கிலாந்து பாராளுமன்றத்திலும் அதன் பயன்பாடு தடைசெய்யப்பட்டது.

நேபாளத்தின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரேகா சர்மா பிபிசியிடம் டிக் டொக் தளம் ஆபாசமான உள்ளடக்கத்தை பரப்புகிறது எனத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தடை உடனடியாக அமலுக்கு வரும் என்றும் முடிவை அமல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles