NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சீரற்ற காலநிலையால் பெருவில் அவசர நிலை பிரகடனம் !

தென் அமெரிக்க நாடான பெருவில் எல்நினோ விளைவு காரணமாக மோசமான பாதிப்புகள் ஏற்படும் என அந் நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


புவி வெப்பமாதல் காரணமாக மத்திய பசிபிக் பெருங்கடலில் ஒழுங்கற்ற காலநிலை நிலவுவதால் ஏற்படும் நிலை எல்நினோ விளைவு என அழைக்கப்படுகிறது.


எவ்வாறாயினும் இதனை சமாளிக்கும் திறன் அரசின் பல துறைகளுக்கு இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.


இந்த நிலையிலேயே வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் மாகாணங்களில் உள்ள 131 மாவட்டங்களில் அடுத்த 60 நாட்களுக்கு அவசர நிலையை அறிவித்து பெரு அரசாங்கம் உத்தரவிட்டு உள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.

Share:

Related Articles