நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மூன்று மாகாணங்களில் மொத்தமாக 12,114 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மழை, காற்று மற்றும் வெள்ளம் ஆகியவற்றின் தாக்கம் முதன்மையாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.