NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான கையொப்ப சேகரிப்பு இன்று ஆரம்பம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கான கையொப்ப சேகரிப்பு இன்று (20) ஆரம்பிக்கப்படவுள்ளது.

பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்த கையொப்ப சேகரிப்பு நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையில் இந்தக் கையொப்பங்கள் பெறப்பட உள்ளதாகவும், கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும் இதில் பங்கேற்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன அறிவித்துள்ளார்.

இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுவும் நேற்று (19) ஒப்புதல் அளித்திருந்தது.

Share:

Related Articles