சுதந்திரமான பொருளாதாரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூரை பின்தள்ளி ஹாங்காங் முதலிடம் பிடித்துள்ளது.
ப்ரேசர் நிறுவனம் நடத்திய உலகின் பொருளாதார சுதந்திரம் பற்றிய அறிக்கையில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.
இந்த அறிக்கையின்படி, சிங்கப்பூர் 8.55 புள்ளிகள் பெற்றுள்ளதுடன், ஹாங்காங் 8.58 புள்ளிகள் பெற்றுள்ளது.
இதன் மூலம் ஆசியாவின் சிறந்த நிதி நிலையமாக ஹாங்காங் உருவெடுத்துள்ளது.
இதேவேளை, பொருளாதார சுதந்திரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் 3 ஆவது இடத்தில் சுவிட்சர்லாந்தும் 4 ஆம் இடத்தில் நியூசிலாந்தும் 5 ஆம் இடத்தில் அமெரிக்காவும் உள்ளது.
அத்துடன், இந்த புள்ளப்பட்டியலில் 3.02 புள்ளிகள் பெற்று வெனிசுலா கடைசி இடத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.