சுனாமி அபாயம் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் கையடக்க தொலைபேசிகளுக்கான ரிங்டோனை அறிமுகப்படுத்த அனர்த்த முகாமைத்துவ நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கையில் 99.9 வீதமான மக்கள் கையடக்கத் தொலைபேசியை வைத்திருப்பதால், சுனாமி அபாயம் குறித்து கையடக்கத் தொலைபேசியின் ரிங்டோன் மூலம் அவர்களுக்குத் தெரிவிக்கப்படும் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.
தொலைபேசி நிறுவனங்கள் இணைந்து இந்தப் பணியைச் செய்து வருவதாகத் தெரிவித்தார்.
பெரும்பாலானோர் அதிகாலை 1 மணி முதல் 4 மணி வரை உறங்கிக் கொண்டிருப்பதால்இ அந்த நேரத்தில் சுனாமி அபாயம் குறித்து தகவல் கிடைத்தால்இ அனைத்து கையடக்கத் தொலைபேசிகளிலும் ஒலிக்கும் முறைமை தயார் செய்யப்படும் என்றும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.