யாழ்ப்பாணம் – சுன்னாகத்தில் அமைந்துள்ள இலங்கை மின்சார சபையின் பிராந்திய பொறியியல் காரியாலயத்தில் இருந்து சூரிய சக்தி மூலமான மின்னிணைப்பு அனுமதி வழங்கப்படுவதில் முறைகேடுகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக, பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக ஜனாதிபதி செயலகத்துக்குப் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில், வீடுகள் மற்றும் கட்டடங்களின் கூரை மேல் பொருத்தப்படும் சூரிய சக்தி இணைப்புக்காக 42 கிலோ வாட்ஸ் வரையான இணைப்புக்களுக்கான அனுமதி சுன்னாகத்தில் உள்ள இலங்கை மின்சார சபையின் பிராந்திய பொறியியல் காரியாலயத்தினாலேயே வழங்கப்படுகின்றன.
ஆந்த அனுமதிக்காக விண்ணப்பித்த பலரது விண்ணப்பங்கள் வருடக்கணக்காகத் தேங்கிப்போயுள்ள நிலையில், குறுகிய காலத்திற்குள் சிலருக்கு முறையற்ற விதத்தில் அனுமதிகள் வழங்கப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட பலர் ஜனாதிபதியின் குறைகேள் அதிகாரிக்கு முறைப்பாடு செய்துள்ளதானத் தெரிவிக்கப்படுகிறது.