NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சுப்மன் கில்லின் சீருடையில் தங்க நாணயம்!

பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் விளையாடிய சுப்மன் கில்,  தனது சீருடை கொலரில் தங்க நாணயம் போன்று ஒன்றை அணிந்திருந்தார்.

முதலில் அது ராசிக்காக ஏதோ அணிந்திருக்கிறார் என்று அனைவரும் கருதினர் . ஆனால், தற்போது அதற்கான காரணம் வெளியாகியிருக்கிறது.

 கடந்த மாதத்தின் ஐசிசி சிறந்த வீரராக கில் தேர்வு செய்யப்பட்டதற்கு கொடுக்கப்பட்ட தங்க நாணயத்தை தான் தனது கொலரில் அணிந்திருக்கிறார்.

 செப்டம்பர் மாதம் ஆசிய கிண்ணப் போட்டிகளில் பாகிஸ்தான் ,நேபாள அணிகளுக்கு எதிராக அரை சதம் எடுத்த கில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக சிறப்பான சதம் அடித்தார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டிகளை கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் ஒரு அரை சதமும் ஒரு சதமும் அடித்தார். இதனால் சுப்மன் கில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார்.

Share:

Related Articles