கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது, இந்நாட்டில் பெறப்படும் வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனைகளின் அளவும், சுற்றுலாத்துறையின் வருமானமும் அதிகரித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் சுற்றுலாத்துறை மூலம் இலங்கை 185.6 மில்லியன் டொலரை ஈட்டியுள்ளது.
அதன்படி இவ்வருடம் ஜனவரி முதல் ஒக்டோபர் வரையிலான 10 மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் ஈட்டிய மொத்தத் தொகை 2533.7 மில்லியன் டொலராகும்.
கடந்த வருடத்தின் (2023) முதல் 10 மாதங்களில் 1593.4 மில்லியன் சுற்றுலா வருமானத்துடன் ஒப்பிடுகையில் இது 59% வளர்ச்சியாகும்.
இதேவேளை, இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் மாத்திரம் நாட்டிற்குக் கிடைத்த வெளிநாட்டுப் பணம் 5,431 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
2024 ஒக்டோபர் மாதத்தில், வெளிநாடுகளில் உள்ள இலங்கைப் பணியாளர்களிடமிருந்து பெறப்பட்ட வெளிநாட்டுப் பணம் 587.7 மில்லியன் அமெரிக்க டொலராகும்.
2023 ஜனவரி முதல் ஒக்டோபர் வரையிலான 10 மாத காலத்துடன் ஒப்பிடுகையில் இது 11.7% அதிகமாகும்.