NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சூரசம்ஹார தினத்தில் மறந்தும் கூட இதனை செய்யாதீர்கள்…!

தமிழ் கடவுளாம் முருகப்பெருமானுக்கு உகந்த கந்த சஷ்டி விரதம் தற்போது அனுஸ்டிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், இன்று சூர சம்ஹாரம் இடம்பெறவுள்ளது.

கந்த சஷ்டி விரத காலத்தில் முருகப்பெருமானை மனதார நினைத்து வேண்டி வணங்கும் பொழுது நாம் நினைத்த காரியம் அனைத்தும் முடியும்.

கேட்டவருக்கு கேட்ட வரத்தை கொடுக்கக் கூடிய முருகனை நினைந்து வழிபடுவோர் வாழ்வில் எல்லா நலமும் வளமும் கிடைக்க கந்தப்பெருமான் அருள் புரியும் காலமிது.

கந்தனை எப்படி எல்லாம் துதிக்க வேண்டும் என்ற தகவல்கள் தெரிந்திருக்கும். ஆனால் இந்த வழிபாடு நேரத்தில் செய்யக் கூடாத சில முறைகளும் உண்டு. அதுவும் சூரசம்ஹாரம் நடைபெறும் நாளில் நாம் செய்ய கூடாத முக்கியமான சில விஷயங்கள் உள்ளது.

சூரபர்த்தனை முருகன் வதம் செய்த உக்கிரமான இந்த நாளில் நாம் யாரிடமும் கோபப்படக் கூடாது. அனாவசியமான பேச்சுக்கள் கூடாது. தீய சொற்கள் கெட்ட செயல்கள் போன்றவற்றை சிந்தையிலும் நினைக்காமல் இருக்க வேண்டும்.

யாரையும் ஆபாச வார்த்தைகள் சொல்லி திட்டி நம்முடைய கோபத்தை வெளிப்படுத்தக் கூடாது. அடுத்து சூரசம்ஹாரம் நடைபெறும் இந்த நாளில் மறந்தும் அசைவம் சாப்பிடக் கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த விடயத்தை விரதம் இருப்பவர்கள் இல்லாதவர்கள் என அனைவரும் நிச்சயமாக அன்றைய தினம் கடைபிடிக்க வேண்டும். அடுத்ததாக வெறும் நெற்றியுடன் இருக்கக் கூடாது.

அன்று வெறும் நெற்றியுடன் இருந்தால் அது அமங்கலத்தை குறிக்கும். நான்காவதாக நாம் கடைப்பிடிக்க வேண்டிய விஷயம். அன்றைய தினம் ஆண்கள் முகசவரம் செய்வது, நகத்தை வெட்டுவதோ கூடாது.

பெண்கள் முடி திருத்தம் போன்றுவற்றையெல்லாம் செய்யக் கூடாது. குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் இன்றைய தினத்தில் இது போன்ற காரியங்களை அறவே செய்யக் கூடாது.

இத்துடன் சூரசம்ஹாரம் தினத்தன்று பகல் உறக்கம் கூடாது. இதையும் விரதம் இருப்பவர்கள் இல்லாதவர்கள் என அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு செயலாக பார்க்கப்படுகிறது.

ஆகையால் விரதம் இல்லாதவர்கள் கூட இன்றைய ஒரு தினமாவது முருகப்பெருமானை நினைத்து பகல் முழுவதும் அவருடைய நாமத்தை சொல்லி கந்தனின் அருளை பெறலாம்.

Share:

Related Articles