NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

செங்கல் தொழிற்சாலையில் திடீரென வெடித்த பொய்லர்.

இந்தியா, மராட்டிய மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் செங்கல் தொழிற்சாலையில் உள்ள பொய்லர் வெடித்து சிதறியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

செங்கல் தொழிற்சாலை வழக்கம்போல் இன்று அதிகாலை செயற்பட்டு வந்த நிலையில், திடீரென அங்குள்ள பொய்லர் வெடித்துள்ளது.

இதில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், 9 பேர் படு காயமடைந்துள்ளனர்.

சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

எதனால் திடீரென பொய்லர் வெடித்தது? பின்னணியில் உள்ள காரணம் என்னவென்பது குறித்து பொலஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles