NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சென்னையில் வரலாறு காணாத வகையில் கோடை வெயில்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

சென்னையில் வரலாறு காணாத வகையில் கோடை வெயில் வெப்பம் அதிகரித்துள்ளது.

கடந்த 4ஆம் திகதி அக்னி நட்சத்திர வெயில் தொடங்கியதில் இருந்து வீதிகளில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளதுடன், அவசர தேவைகளுக்காக மாத்திரம் பொதுமக்கள் வெளியே சென்றுவருகின்றனர்.

நேற்று சென்னையில் 109 டிகிரி வெயில் கொளுத்திய நிலையில், பூந்தமல்லி நகரில் 111 டிகிரியை தாண்டியது.

இன்றும் நாளையும் தமிழகம் மற்றும் புதுவையில் கூடுதலாக 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 102.6 டிகிரி வரை பதிவாக வாய்ப்பு உண்டு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles