NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

செயின்ட் லூசியா கிங்ஸ் அணி தக்கவைக்கவுள்ள வீரர்கள் பட்டியல்.

இவ்வருட கரீபியன் பிரீமியர் லீக் ரி 20 தொடரில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி தக்கவைக்கவுள்ள வீரர்கள் பட்டியலை அண்மையில் வெளியிட்டிருந்ததது. அதன்படி இந்த பட்டியலில் தக்க வைக்கப்பட்டுள்ள முன்னணி வீரர்களில் ஒருவராக இலங்கை கிரிக்கட் அணியின் அதிரடி துடுப்பாட்டவீரரான பானுக்க ராஜபக்ச இடம்பெற்றுள்ளார்.

பானுக்க ராஜபக்ச மற்றும் தென்னாபிரிக்காவின் நட்சத்திர வீரர் ஹெய்ன்ரிச் கிளாசன் , ஆப்கானின் சுழல்வீரர் நூர் அஹ்மட் நமீபியாவின் வேகப்பந்து சகலதுறைவீரர் டேவிட் வீஸே , தென்னாபிரிக்காவின் முன்னணி துடுப்பாட்டவீரர் பாப் டு பிளசிஸ் ஆகியோரும் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி மூலம் தக்க வைக்கப்பட்டிருக்கின்றனர். எனினும், நியூசிலாந்தின் முன்னணி துடுப்பாட்ட நட்சத்திரமான கொலின் மன்ரோ ஜிம்பாப்வே வீரர்களான சிக்கன்தர் ரஷா மற்றும் ஷோன் வில்லியம்ஸ் ஆகிய வீரர்கள் செயின்ட் லூசியா கிங்ஸ் அணியினால் விடுவிக்கப்பட்டிருக்கின்ற அதேநேரம் மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர்களான ஜோன்சன் சார்ள்ஸ், ரொஸ்டன் சேஸ் மற்றும் அல்சாரி ஜோசேப் ஆகிய வீரர்களும் செயின்ட் லூசியா அணியினால் தக்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles