NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜனவரி முதல் Gen Beta எனும் புதிய தலைமுறை உருவாகிறது!

எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் Gen Beta எனும் புதிய தலைமுறை உருவாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

2025 ஆம் ஆண்டு முதல் 2039 ஆம் ஆண்டுவரை பிறப்பவர்கள் Gen Beta என அழைக்கப்படுவார்கள் என குறிப்பிடப்படுகின்றது.

இந்த தலைமுறையினர் பெரும்பாலும் Gen Alpha மற்றும் Gen Zக்களின் வாரிசுகளாக இருப்பார்கள்.

மேலும் 2035ல் உலக மக்கள் தொகையில் 16% பேர் Gen Z தலைமுறையாக இருக்க வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Gen Beta என்றால் என்ன?

தலைமுறை பீட்டா (Gen Beta) என்பது 2025 மற்றும் 2039 க்கு இடையில் பிறந்தவர்களுக்கு வழங்கப்படும் பெயர். அவர்கள் மில்லினியல்கள் மற்றும் மூத்த ஜெனரல் இசட்களின் (Z) குழந்தைகள். இந்த பெயர் கிரேக்க எழுத்துக்களில் இருந்து வந்தது. இது இந்த தலைமுறை தொழில்நுட்ப ஒருங்கிணைப்பின் புதிய உலகத்தால் வடிவமைக்கப்படும் என்பதைக் குறிக்கப் பயன்படுகிறது.

Share:

Related Articles