NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள்தான் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு..!

ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் தான் என்பதை ஜனாதிபதி உறுதியாக நம்புவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

மேலும் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொண்ட தீர்மானத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஆதரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்வதற்கு முன்னர் சமிந்திர தயான் லெனவ தன்னிடமோ அல்லது தனது சட்டத்தரணிகளுடனோ அது தொடர்பில் கலந்தாலோசிக்கவோ ஆலோசனை பெறவோ இல்லை எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Related Articles