NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் உயர்மட்ட குழு டெல்லி விஜயம்!

இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் உயர்மட்ட குழு ஜனவரி மாதத்தில் டெல்லிக்கு விஜயம் செய்யவுள்ளது.

இந்த விஜயத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி திரௌபதி முர்மு உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்திற்கான அழைப்பினை, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கையளிக்க உள்ளதுடன், அவரது விஜயமானது இலங்கையின் சுதந்திர தினத்தன்று இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முழு அளவில் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.

இந்தநிலையில், தெற்கு பசிபிக் தீவு நாடான சமோவாவில் இடம்பெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் உச்சி மாநாட்டிலும், ரஷ்யாவில் இடம்பெற்ற பிரிக்ஸ் அமைப்பின் மாநாட்டிலும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பங்கேற்கவில்லை.

எனினும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் முதலாவது அரச முறை வெளிநாட்டு விஜயமாக எதிர்வரும் ஜனவரி மாதம் டெல்லிக்கு செல்லவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார குழு பங்கேற்க உள்ளதுடன் இலங்கை – இந்திய பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார உறவுகள் குறித்து பரந்துபட்ட பேச்சுவார்த்தைகளில் இருதரப்பும் ஈடுபடவுள்ளன.

இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற இந்திய திட்டங்கள் குறித்து இலங்கை குழு அவதானம் செலுத்தவுள்ளதோடு குறிப்பாக ஜனாதிபதி அநுரவின் அரசாங்கத்தின் விமர்சனத்திற்கு உட்பட்டுள்ள அதானி நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டம் குறித்தும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

Share:

Related Articles