அநுரவுக்கு அரசாங்கத்தை நடத்த அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என இளம் வாக்காளர் முன்னணியின் பொதுச் செயலாளர் கலாநிதி சமன் வன்னியாராச்சிகே தெரிவித்துள்ளார்.
ஆனால் அவருக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்க வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, பொதுத் தேர்தலை ஒத்திவைகுமாறும், அடுத்த நாள் பௌர்ணமி தினம் ஆகவே மக்களின் மத நல்லிணக்க நடவடிக்கைகளை மதிக்க வேண்டும் என்றும் கலாநிதி சமன் வன்னியாராச்சிகே தெரிவித்தார்.
தேர்தலுக்கு அடுத்த நாள் “கட்டின போய தினமாகும்” இதன் போது தேர்தல் அறிவிக்கப்பட்டு பௌத்தர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றமையால், அதனை மாற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், காலி முகத்திடலுக்கு கொண்டு வரப்பட்ட வாகனங்களை அத்தியாவசிய சேவைகளுக்கு மாற்றியமை நல்ல விடயமாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், புதிய ஜனாதிபதிக்கு மக்களுக்கான பல பொறுப்புகள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.