சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சீனாவின் பீஜிங் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அந்நாட்டு நேரப்படி காலை 10.25 மணியளவில் சீனாவை சென்றடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் மற்றும் சீன பிரதமர் லி கியாங் உள்ளிட்ட பலரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் வறுமை ஒழிப்பு உள்ளிட்ட துறைசார் பல கள விஜயங்களிலும் ஜனாதிபதி பங்கேற்க உள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.