NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க களமிறங்குவாா் – அமைச்சர் பிரசன்ன


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வேட்பாளராக களமிறங்குவாா் என அரசாங்கத்தில் உள்ள பலரும் எதிர்பார்த்து வருவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க பதவிக்கு வந்தால் அவருக்கு ஆதரவளிப்பதில் பிரச்சினை இல்லை.

நாட்டில் காணப்பட்ட பொருளாதார நெருக்கடியின் காரணமாக நாட்டு மக்களின் நலன் கருதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரசித்தம் அற்ற தீர்மானங்கள் பலவற்றை முன்னெடுத்திருந்தார்.

அதன் பலனாகவே நாடு தற்போது சுமூகமான நிலைமைக்கு மாறியுள்ளது. கடந்த இரு வருடங்களுக்கு முன்பாக காணப்பட்டதை விடவும் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைவடைந்துள்ளது.

எனவே அடுத்த தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு உதவுவதா இல்லையா என்பதை எவரும் இதுவரை பகிரங்கமாக கூறவில்லை.

காரணம் இன்னும் ஜனாதிபதி தேர்தலுக்கு பெயரிடப்படவில்லை. ஜனாதிபதி தேர்தலுக்கு பெயரிடப்படும் போது, எமது வேட்பாளர் யார் என்று கூறுவோம்”என தெரிவித்துள்ளார். 

Share:

Related Articles