ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பெசில் ராஜபக்ஷ ஆகியோருக்கிடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இருதரப்புக்கும் இடையில் சுமார் ஒரு மணிநேரம் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன உறுப்பினர்கள் குழுவிற்கு அமைச்சரவை அமைச்சுப் பதவி வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு ஜனாதிபதி சாதகமாக பதிலளிக்காத நிலையில், இருவருக்கும் இடையில் நீண்டகாலமாக கலந்துரையாடல்கள் எதுவும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், ஜனாதியுடனான கலந்துரையாடலில் எதிர்வரும் வரவு-செலவுத் திட்டம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், சலுகைகள் தொடர்பிலும் இருதரப்புக்கும் இடையில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.
அத்துடன், எதிர்கால அரசியல் நிகழ்ச்சி நிரல் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.