NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜப்பானில் இரு விமானங்கள் மோதி விபத்து!

ஜப்பானின் வடக்கு ஹோக்காய்டோ மாகாணம் சப்பரோ தீவில் உள்ள நியூ சித்தோஸ் விமானநிலையத்தில் இருந்து புறப்படத்தயாரான விமானம், விமான ஓடுதளத்தில் இருந்து வானில் எழும்ப முயன்றபோது அங்கே பயணிகள் யாரும் இல்லாமல் நின்று கொண்டிருந்த கேத்தே பசிபிக் நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் விமானத்தில் பயணித்த 289 பேரில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. புறப்பட்ட விமானத்தின் முன்பக்க இறக்கை சேதம் அடைந்துள்ளது.

அங்கு நிலவிய கடுமையான பனிமூட்டம் காரணமாக குறித்த விபத்து ஏற்பட்டதாகவும் இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் ஜப்பானின் உள்நாட்டு விமான போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.

Share:

Related Articles