NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜப்பானில் நூற்றுக்கனக்கான விமானங்களும் புகயிரதங்களும்இரத்து…!

ஜப்பானில் மற்றொரு சூறாவளி அச்சம் காரணமாக நூற்றுக்கணக்கான ஜப்பானிய விமானங்கள் மற்றும் புகையிரதங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதன்படி 280 உள்நாட்டு விமானங்கள் இன்று (16) இரத்து செய்யப்பட்டுள்ளன.அதே நேரத்தில் ஜப்பான் ஏர்லைன்ஸ் 191 உள்நாட்டு மற்றும் 26 சர்வதேச சேவைகளை இரத்து செய்துள்ளது.

இந்த சூறாவளி தொலைதூர பசுபிக் தீவான சிச்சிஜிமாவிலிருந்து 300 கிலோமீட்டர் (190 மைல்) தொலைவில் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கம்போடியாவின் கெமர் மொழியில் புளி என்று பொருள்படும் அம்பில் என்ற பெயர் கொண்ட இந்த சூறாவளி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பசுபிக் பகுதியை நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.இதனால் கிழக்குப் பகுதிகளில் கடுமையான காற்று, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் ஆறுகள் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படலாம் என ஜப்பானின் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

மேலும், ஜப்பானின் புல்லட் புகையிரத சேவையின் முக்கிய பகுதிகளும் இன்று இரத்து செய்ய திட்டமிடப்பட்டுள்ளன.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles