மிகவும் ஆபத்தான மற்றும் மரணத்தை ஏற்படுத்தக்கூடிய ஸ்ட்ரெப்டோகாக்கல் டாக்சிக் ஷொக் சிண்ட்ரோம் எனும் பக்டீரியா தொற்று ஜப்பானில் வேகமாக பரவிவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தொண்டை வலி, உறுப்புகளின் செயற்பாடு குறைபாடு, உடல் வீக்கம், மூட்டுவலி, குறைந்த இரத்த அழுத்தம் போன்றவை இந்த தொற்றின் அறிகுறிகளாக கூறப்படுகின்றன.
உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் குறிப்பிடப்படுகின்ற போதிலும், தொற்று பரவல் அதிகரிப்புக்கான காரணம் வல்லுநர்களினால் இதுவரை சுட்டிக்காட்டப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 1,000 பேர் இந்த பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜப்பானின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன், கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான காலப்பகுதியில் மாத்திரம் 77 பேர் தொற்றுநோயால் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
வைரஸினால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் 48 மணி நேரத்திற்குள் உயிரிழக்க நேரிடும் எனவும் கூறப்படுகிறது.