NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜப்பானில் 155 நில அதிர்வுகள் பதிவு – 13 பேர் பலி!

ஜப்பானில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 7.6 பதிவானதால் கட்டடங்கள் குலுங்கின. சாலைகள் பிளந்து கடும் சேதம் அடைந்தன. மிகப்பெரிய நிலநடுக்கம் என்பதால் உயர்மட்ட சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் அது திரும்பப் பெறப்பட்டது.

இருந்த போதிலும் நேற்றைய புத்தாண்டு தினத்தில் இருந்து இன்று வரை அதிர்ந்து கொண்டே இருந்ததாக ஜப்பான் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மொத்தமாக 155 முறை நில அதிர்வு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பெரும்பாலன நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3க்கும் அதிகமாக பதிவாகியுள்ளன. இந்நிலநடுக்கம் காரணமாக தற்போது வரை உயிரிழப்பு 13 ஆக உயர்ந்துள்ளது. பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. உயிரிழப்பும் சேதமும் அதிகரித்துள்ளதாக ஜப்பான் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles